மேலும்

நாள்: 8th February 2015

குழப்பத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு பழைய வேட்புமனுவின் படியே வரும் 28ம் நாள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்

அனைத்துலக சமூகத்தினால் மதிக்கப்படும் நிலைமைக்கு சிறிலங்கா மீண்டும் வந்துள்ளதாக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர்  அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியை கவலை கொள்ள வைத்துள்ள சிறிலங்காவின் குழப்பமான சமிக்ஞைகள்

சிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கம் தேர்தல் பரப்புரையின் போது சீனாவின் திட்டங்களை எதிர்ப்பேன் என வாக்குறுதி வழங்கிய போதிலும் அதனைத் தற்போது மீறிவருகிறது.

தோல்விக்குப் பின் மீண்டும் அரசியல் மேடையில் ஏறுகிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், முதல் முறையாக பொதுமக்கள் முன்பாக அரசியல் மேடை ஒன்றில் தோன்றவுள்ளார்.

புலிகளின் விமானத் தாக்குதலுக்குப் பயந்து அதிபர் மாளிகையில் கட்டப்பட்ட பதுங்குகுழிகள் கண்டுபிடிப்பு

சிறிலங்கா அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியிலான பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகிந்த ஆட்சியில் பதுக்கிய சொத்துக்களை மீட்க உலக வங்கியுடன் இணைந்து நடவடிக்கை

சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர்களால், முறைகேடான வகையில் சேகரிக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

அலரி மாளிகையில் கூட்டமைப்பு – அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியமர்வு குறித்து ரணிலுடன் பேச்சு

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு?

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.