மேலும்

நாள்: 1st February 2015

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நரேந்திர மோடி தீவிர அக்கறை – முரளிதர் ராவ்

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை கொண்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை அனைத்துலக தரம் வாய்ந்தாக இருக்க வேண்டும் – பான் கீ மூன்

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா உருவாக்கும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை, அனைத்துலகத் தரம் வாய்ந்ததாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

குழப்பத்தை ஏற்படுத்த முனையும் இராணுவ அதிகாரிகள் – கருத்துக்கூற மறுக்கும் இராணுவப் பேச்சாளர்

வடக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு இராணுவ அதிகாரிகள் ஒரு குழுவினருக்குப் பயிற்சிகளை அளித்து வருவதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

ஐதேக அரசுடன் மீண்டும் ஒட்டிக்கொள்ள முயன்ற ரம்புக்வெல – வெட்டிவிட்டார் ரணில்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ள முயன்ற போதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது மகிந்த அரசு விதித்த தடை தொடரும் – சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு

சிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது.

வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்த வாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கின் புதிய ஆளுனருக்கு ‘ஓதி அனுப்பிய’ இராணுவ அதிகாரிகள்

வடக்கு மாகாண ஆளுனர் பதவியைப் பொறுப்பேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்காரவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முதலாவது சந்திப்பு நாளை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவாவில் புதிய திட்டத்தை முன்வைக்கிறது அமெரிக்கா? – நிஷாவின் பயணத்தில் தெரியவரும்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் புதிய திட்டம் ஒன்றை முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கும் செல்கிறார் மோடி

வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.