மேலும்

நாள்: 26th February 2015

எல்லா நாடுகளுடனும் சுமுக உறவு – இதுவே தமது வெளிவிவகாரக் கொள்கை என்கிறார் மைத்திரி

தமது அரசாங்கம் தொடர்ந்தும் அணிசேரா கொள்கையையே கடைப்பிடிக்கும் என்றும், எல்லா நாடுகளுடனும், சுமுகமாக உறவுகளைப் பேணும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் கோத்தா – முன்னாள் காவல்துறை பேச்சாளர் பரபரப்பு செவ்வி

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கொலை அச்சுறுத்தலினால் தான், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சிக்காலத் திட்டங்களின் இன்றைய நிலை – ஏஎவ்பி

அம்பாந்தோட்டையில் 15.5 மில்லியன் டொலர் செலவில் மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டது. 2013 பொதுநலவாய மாநாடு இடம்பெற்ற பின்னர், இந்த மண்டபம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதில் தற்போது திருமண விழாக்களும் இடம்பெறுகின்றன.

சபதத்துடன் சிறிலங்கா வந்துள்ள புதிய சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுறவை இறுதிப்படுத்தும் முயற்சிகளைத் தொடரப் போவதாக சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு இன்று புறப்படுகிறார் மங்கள சமரவீர

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை இன்று சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் கடந்த மாதம் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், உயர்மட்ட அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இணைந்து கொள்ள யோசித ராஜபக்சவுக்கு அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில், அவரது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்ச இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சிறிலங்கா குறித்த அறிக்கை பிற்போடப்பட்டதை நியாயப்படுத்துகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவை

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை, மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காமல் பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் நிகழ்ந்த மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா- சூசகமாக தெரிவித்த ஜோன் கெரி

சிறிலங்காவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.