மேலும்

நாள்: 25th February 2015

நீதிமன்றத்தில் சசி வீரவன்ச கொடுத்த அதிர்ச்சி

நோயாளர் காவு கட்டிலில் நேற்றிரவு வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச இன்று காலை சாதாரணமான முறையில் நீதிமன்றத்துக்கு நடந்து வந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை தனது ஆண்டறிக்கையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை

வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற பதத்தை பயன்படுத்தியது புதிய அரசாங்கத்திலுள்ள பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு ‘செக்’ வைப்பதே மோடியின் பயணத் திட்டம் – இந்திய ஊடகம்

இந்தியப் பெருங்கடல் நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம், சிறிலங்கா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியாவின் டெக்கான் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் தேசிய அரசு – 100 ஆக அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை

தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 55 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் பரப்புரை இன்று நள்ளிரவுடன் முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு வரும் 28ம் நாள் நடக்கவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன.

உயர்மட்டப் பிரதிநிதியை கொழும்புக்கு அனுப்புகிறார் ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா பொதுச்செயலரின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.