மேலும்

நாள்: 27th February 2015

சீனாவுடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கமாட்டோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர

சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடைசி நேரத்தில் தேர்தலை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

நாளை நடைபெறவிருந்த புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்களை வரும் மார்ச் 27ம் நாள் வரை நடத்துவதற்கு, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் றொகான் குணரத்னவுக்கு ஒரு பதிலடி

கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதும், இராணுவத்தினர் பண்ணைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களை வைத்திருப்பதும் தான் தேசிய பாதுகாப்பின் நோக்கங்களா? இவ்வாறு பேராசிரியர் றொகான் குணரத்னவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பொருளியல் நிபுணரும், ஆய்வாளருமான கலாநிதி முத்துகிருஸ்ண சர்வானந்தா.

யாழ்ப்பாணமும் செல்கிறார் ஐ.நா உயர் பிரதிநிதி

சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள, ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைவான் கடத்தல்களில் ஈடுபட்டது இராணுவ அதிகாரிகளே- முன்னாள் காவல்துறை பேச்சாளர்

வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், முன்னாள் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகள், பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெறுகிறது கூட்டமைப்பு

இரண்டு அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண அமைச்சரவையில் இணைந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.