மேலும்

நாள்: 12th February 2015

யாழ்ப்பாணத்தில் 1000 ஏக்கர் உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள, பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒபாமா, பான் கீ மூன், ஜோன் கெரியை சிறிலங்கா வருமாறு அழைப்பு

அமெரிக்க அதிபர் சிறிலங்காவுக்கு வருகை தருவதை தாம் எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு

போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து ஐ.நாவின் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இனப்படுகொலைத் தீர்மானம் – மைத்திரிக்கு ஏமாற்றமாம்

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்சல் பதவியைக் கோரவில்லை, தந்தால் ஏற்பேன்- என்கிறார் ஜெனரல் பொன்சேகா

தன்னை பீல்ட் மார்சல் தரத்துக்கு பதவி உயர்த்துமாறு தாம் கோரவில்லை என்றும், அரசாங்கம் அந்தப் பட்டத்தை அளிக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

விசாரணை அறிக்கை தாமதமாகுமா? – கருத்துக் கூற மறுத்த ஐ.நா பேச்சாளர்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடுவது தாமதிக்கப்படுமா என்பது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

ஐ.நா அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா கோரிக்கை – வொசிங்டனில் மங்கள தகவல்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.