மேலும்

நாள்: 9th February 2015

சிறிலங்கா பாதுகாப்புச்செயலருடன் இந்திய துணைத் தூதர் சந்திப்பு

வடக்கு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை, இந்தியத் துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடற்புலிகள் உருவாக்கிய கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்த்த இந்தியக் கடலோரக் காவல்படை

அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.

ரணிலுக்கு எதிராக மகிந்தவை முன்னிறுத்த நான்கு கட்சிகள் விருப்பம்

நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் இன்று விருப்பம் வெளியிட்டுள்ளன.

வெலிக்கடைச் சிறையில் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை சந்தித்து நலன் விசாரித்தார்.

பழிவாங்கல்களுக்கு அஞ்சமாட்டேன் – இந்திய ஊடகத்துக்கு கோத்தா செவ்வி

சிறிலங்கா அரசாங்கத்தினதோ, மேற்கு நாடுகளினதோ பழிவாங்கல்களுக்குத் தாம் அஞ்சப் போவதில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவை சமாளிக்க மங்கள சமரவீர தீவிர முயற்சி – தொடர் வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்தார்

வெளிநாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுவதற்கு ஆதரவு திரட்டவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தொடர் வெளிநாட்டுப் பயணங்களை ஆரம்பித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – மல்வத்தை பீடாதிபதி

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ரணில் எச்சரிக்கை

சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சம்பூர் மீள்குடியேற்ற விவகாரம் – நாளை மைத்திரிக்கு அறிக்கை அனுப்புகிறார் ஆளுனர் ஒஸ்ரின்

சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினால், இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ.