யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்
அடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்கு பரப்புரை நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த மாத இறுதியில், சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்லும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க, நான்கு நட்சத்திர ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
அனைத்துலக சமூகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால், அவர்களின் இணக்கப்பாட்டுடன், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்ற வவிசாரணைகளை முன்னெடுப்போம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்த புரொன்ட்லைன் சஞ்சிகையை, சிறிலங்காவில் விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத அமைப்பான சிங்கள ராவய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கம் சேவை நீடிப்பு வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார்.