மேலும்

நாள்: 23rd February 2015

மைத்திரியைப் படுகொலை செய்யும் சதி முயற்சி – மேலதிக விசாரணை நடத்தப்படாதாம்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் முயற்சி தொடர்பாக கிடைத்த தகவல் குறித்து, விசாரணை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி கடமையைப் பொறுப்பேற்றார்

சிறிலங்காவின் 21வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, இன்று  இராணுவத் தலைமையகத்தில் அதிகாரபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அச்சு ஊடகங்களுக்கு ரணில் கடும் எச்சரிக்கை

சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டு,  இனரீதியான குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவின் வணிகச் செயற்பாடுகளில் இந்தியா தலையிடக் கூடாது – சம்பிக்க ரணவக்க

சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும்  வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் முன் உள்ள சவால்கள் – அனைத்துலக ஊடகம்

ராஜபக்சக்களால் அனுமதிக்கப்பட்ட சீனாவை சிறிலங்கா தனது நாட்டிலிருந்து வெளியேற்றினால் இந்தியா மகிழ்ச்சியடைந்திருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இந்த விடயத்தில் சிறிலங்காவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.

அரச புலனாய்வுச் சேவையை விஞ்சியுள்ள சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவு

சிறிலங்காவின் பிரதான புலனாய்வு அமைப்பான அரச புலனாய்வுச் சேவையை மிஞ்சி, இராணுவப் புலனாய்வுப் பிரிவு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், அண்மைய இராணுவக் கட்டமைப்பு மாற்றங்களின் போது, இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டிருந்த அவுஸ்ரேலிய அரசு மீது ரணில் கடும் குற்றச்சாட்டு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட் கொண்டிருந்த நெருக்கமான உறவு, இலங்கையர்களுக்கு ஒரு மர்மமாகவே இருந்தது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

விஸ்வமடுவில் கிடந்த 35 ஆயிரம் சடலங்கள் – மன்னார் ஆயர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

போரின் இறுதிக்கட்டத்தில், விஸ்வமடுவுக்கு அருகில் 30 ஆயிரம் தொடக்கம், 35 ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்கு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த விமல் வீரவன்சவின் மனைவி கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி, சசி வீரவன்ச சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.