மேலும்

லண்டனுக்குச் செல்கிறார் மைத்திரி – மகிந்தவுக்கு கிடைக்காத வரவேற்புக்கு மகாராணி ஏற்பாடு

Maithripala_Sirisenaபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வரும் மார்ச் 7ம் நாள் பிரித்தானியா செல்லும் சிறிலங்கா அதிபர், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறும், கொமன்வெல்த் வார கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபரே கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.

இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, தனிப்பட்ட பார்வையாளராகச் சந்திக்க பிரித்தானிய மகாராணி இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் ஒருவரை இரண்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர், தனிப்பட்ட பார்வையாளராக பிரித்தானிய மகாராணி சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அவருக்கு பிரித்தானிய மகாராணி மதியபோசன விருந்து அளித்தும் கௌரவிக்கவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனையும், சிறிலங்கா அதிபர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் 4 நாட்கள் தங்கிருக்கும், மைத்திரிபால சிறிசேன அங்கு பல்வேறு தரப்பினரைச சந்திக்கவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *