மேலும்

அரசதரப்புக்குப் தாவமாட்டோம் – திஸ்ஸ உள்ளிட்ட 3 ஐதேக பிரமுகர்களும் அறிவிப்பு

tissa-palithaஆளும்கட்சியில் தாம் இணைந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.

அவர் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆளும்கட்சியில்இணைந்து கொள்ளப் போவதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை.

நான் தொடர்ந்து ஐதேகவிலேயே இணைந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முன்னதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார மற்றும் பாலித தேவரப்பெரும ஆகியோரும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்திருந்தனர்.

இவர்கள் மூவரும் இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்புடன் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

வடமத்திய மாகாண அமைச்சரின் பதவி பறிப்பு

எதிரணியின் பொது வேட்பாளராக அதிபர் தேர்தலில் களமிறங்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்த வடமத்திய மாகாண அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வடமத்திய மாகாண கூட்டுறவு, வர்த்தக, கைத்தொழில், கிராமிய அபிவிருத்தி சுற்றுலா அமைச்சர் பேசல ஜெயரத்னவையே, மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன் இன்று பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுடன் இவர் தொடர்பு வைத்துள்ளார் என்பதற்காகவே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனாவுக்கு மைத்திரிபால அழைப்பு

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சிகளிடம் இருந்த பல அழைப்புகள் கிடைத்துள்ள போதிலும், அவர்களைச் சந்திப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *