மேலும்

முன்னாள் போராளி கொலை: கிராம அலுவலர் உள்ளிட்ட 6 பேர் கைது

naguleswaranமன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அந்தப் பகுதி கிராம அலுவலர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தடயவியல் ரீதியான முக்கிய சாட்சியங்களும், விபரங்களும் காவல்துறை விசாரணைகளில் கிடைத்துள்ளன.

அதன் அடிப்படையில் சாட்சிகள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் பற்றிய தகவல்கள், விசாரணைகள் முடிவடைந்ததும் சில நாட்களில் வெளியிடப்படும்.

அந்தப் பகுதியின் பிரதேச செயலரும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பல விடயங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெறுகின்றன.

இந்தச் சம்பவத்தில் எவர் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களின் பதவி நிலையைக் கருத்தில் கொள்ளாமல் கைது செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தக் கொலைச் சம்பவத்துடன், அரசியல் மற்றும் அரச அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் நீதிமன்றத்தில் நடந்த முக்கிய வழக்கு ஒன்றின் பிரதான சாட்சியாக, நகுலேஸ்வரன் சேர்க்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *