மேலும்

இலங்கைத் தமிழரான அமெரிக்க இராணுவ விஞ்ஞானிக்கு அனைத்துலக பொறியியல் விருது

Dr.paramsothy-jeyakumarஅமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பட்டம் பெற்றதுடன், 1982-83 காலப்பகுதியில், பேராதனைப் பல்கலைக்கழக கணிதபீடத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு SAE International  என்ற மதிப்புமிக்க அனைத்துலக பொறியியலாளர் அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும், ஆர்ச் ரி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கம் (Arch T. Colwell Cooperative Engineering Medal) வழங்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் இந்த விருது வழங்கப்படும்.

இந்த உலகளாவிய விருதை வழங்கும், SAE International  அமைப்பு உலகெங்கும் உள்ள 138 ஆயிரம் பொறியியல் வல்லுனர்களை உறுப்பினராக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *