மேலும்

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது மாகாணசபை

northern-provincial-councilசட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணிகளின் விபரத்தைத் திரட்டுவதற்காக, வடக்கு மாகாணத்தில், உள்ள காணிகள் தொடர்பான விபரங்களை வடக்கு மாகாணசபை சேகரித்து வருகிறது.

இதன்படி, சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள், அரசாங்க காணிகள், பொதுகட்டங்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளிடம் மாகாணசபை கோரியிருக்கிறது.

இதுபற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு, மாநகர, நகரசபைகளின் முதல்வர்கள், பிரதேசசபைகளின் தலைவர்களிடம் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரசகாணிகள். தனியார் சொத்துகள். காணிகளின் எல்லை,  காணிகளின் உரிமையாளர்கள், பற்றிய தகவல்கள் திரட்டப்படவுள்ளன.

அத்துடன் எவ்வளவு காலமாக சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் காணிகள் உள்ளன என்ற விபரத்தை திரட்டவும் வடக்கு மாகாணசபை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் இதுபற்றிய தரவுகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்தத் தரவுகள் சேகரிப்பு ஆரம்பமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *