மேலும்

Archives

சந்திராணியுடன் ஆளும்கட்சிக்குத் தாவினார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (படங்களுடன் 3ம் இணைப்பு)

இளம் இலங்கைக் குடும்பத்தை நௌரு கொண்டு செல்வதற்கு எதிராக அவுஸ்ரேலியாவில் போராட்டம்

மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் தடுப்பு முகாமில் இருந்து, இளம் இலங்கைக் குடும்பம் ஒன்றை நௌருவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

”அதிபர் மாளிகையில் காலடி வைக்கமாட்டேன்” – மைத்திரி சூளுரை

அடுத்தமாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அதிபர் மாளிகையில் காலடி எடுத்து வைக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா – இந்திய உறவு குறித்து மகிந்தவிடம் திருப்தி வெளியிட்டார் டோவல்

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் தரம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் திருப்தி வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

மைத்திரிபாலவை ஆதரிப்பதாக ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஜாதிக ஹெல உறுமய ஆதரவு தெரிவித்துள்ளது.

எதிரணியின் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்றுகாலை புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

மகிந்தவும் மோடியும் காத்மண்டுவில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று பிற்பகல் காத்மண்டுவில் இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

தினமும் 15 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை நுகரும் யாழ். வாசிகள் – அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

யாழ்.மாவட்டத்தில் மதுப்பாவனை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மதுபானம் நுகரப்படுவதாகவும், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மதுவரித் திணைக்களம்.

தீவிரவாதமே நாட்டுக்கு அடிப்படைச் சவால் – சார்க் மாநாட்டில் மகிந்த

தீவிரவாதம் இன்னமும் தமது  நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.