மேலும்

Archives

போரில் பங்கேற்ற படையினரின் விபரங்களைக் கோரியுள்ளதாம் ஐ.நா – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

மைத்திரியின் சுகாதார அமைச்சைக் கைப்பற்றினார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐதேகவில் இருந்து அரசதரப்புக்குத் தாவிய திஸ்ஸ அத்தநாயக்க சிறிலங்காவின் புதிய சுகாதார அமைச்சராக இன்று காலை பொறுப்பேற்றுள்ளார்.

ஹெல உறுமயவை உடைத்தார் மகிந்த – அரசதரப்புக்குப் பாய்ந்தார் உதய கம்மன்பில

மேல் மாகாணசபை உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகருமான உதய கம்மன்பில, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மோடியின் பாணியில் மைத்திரி – கண்டி கூட்டத்தில் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிகாரபூர்வமாக நேற்று கண்டியில் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

திருப்பதி சென்றடைந்தார் மகிந்த – கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பயணத்திட்டம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை திருப்பதியைச் சென்றடைந்துள்ளார்.அங்கு அவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த அனைத்துலக சக்திகள் முயற்சி – இராணுவத் தளபதி குற்றச்சாட்டு

சிறிலங்காவில் குழப்பநிலையை ஏற்படுத்த பல்வேறு அனைத்துலக சக்திகளும் முயற்சிப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டே மகிந்தவுடன் கைகுலுக்கவில்லை – காரணத்தை விபரிக்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கி தனது கைகளில் கறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததால் தான், நேற்று அவர் கைகுலுக்க முயன்றபோது அதனைத் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

“மகிந்தவுக்கு பிடித்துள்ளது பண்டா போபியா” – சந்திரிகா கிண்டல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தற்போது பண்டாரநாயக்க போபியா (பயம்) வினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிரணிக்குப் பாய்ந்தார் ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, எதிரணியுடன் இணைந்து, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

19 வேட்பாளர்கள் போட்டியிடும் சிறிலங்கா அதிபர் தேர்தல்

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.