மேலும்

ஹெல உறுமயவை உடைத்தார் மகிந்த – அரசதரப்புக்குப் பாய்ந்தார் உதய கம்மன்பில

champika-uthaya-nishanthaமேல் மாகாணசபை உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகருமான உதய கம்மன்பில, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடந்து வரும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுள்ள உதய கம்மன்பில, இந்த முடிவை அறிவித்துள்ளார்.

மேல் மாகாண அமைச்சராகப் பதவி வகித்த உதய கம்மன்பில, அண்மையில் பதவியை விட்டு விலகியிருந்தார்.

எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிக்க எடுத்த முடிவையடுத்து  ஜாதிக ஹெல உறுமயவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

uthaya-gammanpila-slfp

தாம் ஜாதிக ஹெல உறுமயவை விட்டு விலகி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் மீண்டும் மேல் மாகாண அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதேக பொதுச்செயலராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்கவை, ஆளும்கட்சியில் இணைப்பதில் முக்கிய பங்காற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ், உதய கம்மன்பிலவை அரசுத் தரப்புக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *