மேலும்

Tag Archives: ஹெய்டி

சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்

ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவ வீரர் எவ்வித பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என தனது தாயார் வீட்டின் தோட்டத்தில் கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத்துக்குள் உள்ள புற்றுநோய்

ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த சிறிலங்கா இராணுவ வீரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்ற்றியில் எவ்வாறு பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது தொடர்பான அதிர்ச்சியான ஒரு பதிவை The Associated Press   ஊடகம்  அண்மையில் வெளியிட்டிருந்தது.

சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் – ஐ.நா

ஐ.நா அமைதிப்படைக்கு தமது படையினரை அனுப்பும் உறுப்பு நாடுகள், ஐ.நா அமைதிப்படைக்கு தமது வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் – ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இருந்து ‘பாதுகாக்கப்பட்ட’ சிறிலங்கா படையினர் – ஏபி

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.