மேலும்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இருந்து ‘பாதுகாக்கப்பட்ட’ சிறிலங்கா படையினர் – ஏபி

??????????????????ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டில் இருந்து கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா நாடுகளின் படையினர், மீது 2000 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெய்டியில் மாத்திரம், சிறிலங்கா உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த படையினர், 300இற்கும் அதிகமான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதில், 2004ஆம் ஆண்டுக்கும், 2007ஆம் ஆண்டுக்கும் இடையில், 134 சிறிலங்கா படையினர் ஒன்பது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவங்களும் அடங்கும்.

ஹெய்டியில் ஐ.நாவினால் அமைதிகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்ட 900 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ பற்றாலியனைச் சேர்ந்தவர்களில் 134 பேர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினருக்கும் ஹெய்டி சிறுவர்களுக்கும் இடையில் சந்தேகத்துக்குரிய தொடர்புகள் இருப்பதாக, 2007ஆம் ஆண்டு ஐ.நாவுக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, பாதிக்கப்பட்ட ஒன்பது சிறுவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

இதன்போது 16 வயதுச் சிறுமி ஒருவர் தாம், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவருடன், பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறினார். 14 வயதான இன்னொரு சிறுமி, பணம் அல்லது உணவுக்காக தாம் ஒவ்வொரு நாளும் சிறிலங்கா இராணுவத்தினருடன் உறவு கொண்டதாக தெரிவித்தார்.

இன்னொரு சிறுவன், 20க்கும் அதிகமான சிறிலங்கா படையினருடன் பாலியல் உறவை வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

இத்தகைய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய 114 சிறிலங்கா படையினர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை.

அதேவேளை சிறிலங்கா தொடர்ந்தும் ஹெய்டிக்கு தமது படையினரை அனுப்பிக் கொண்டிருக்கிறது.“ என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *