மேலும்

Tag Archives: புலனாய்வு

தாக்குதல்களுடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு – சிறிலங்கா தளபதியின் பெயரில் பாகிஸ்தான் குசும்பு

பாகிஸ்தானைத் தளமாக கொண்ட பாகிஸ்தான் இராணுவ ஆதரவு கீச்சகப் பதிவர்கள், போலியான சிறிலங்கா கீச்சக கணக்குகளின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பெண் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி விகாரைகளில் தாக்குதல் நடத்த திட்டம்

பெண் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி, பௌத்த விகாரைகளில் தாக்குதல் நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டி – 100 வீதம் உறுதி என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தடவையாக அட்மிரல் கரன்னகொட சிஐடியினால் விசாரணை அழைப்பு

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, மூன்றாவது தடவையாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சட்டபூர்வமான புலனாய்வு செயற்பாடுகளையே முன்னெடுத்தோம் – என்கிறார் கோத்தா

போரின் இறுதிக்கட்டத்தில் தனது கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமானவையாகவே இருந்தன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கைது செய்வதை தடுக்கக் கோரி அட்மிரல் கரன்னகொட உச்ச நீதிமன்றில் மனு

தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட.

சிஐடி விசாரணையை நிறுத்தக் கோரிய மகிந்த – நிராகரித்தார் சபாநாயகர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.

மற்றொரு கடற்படைப் புலனாய்வு அதிகாரியைக் கைது செய்யும் முயற்சியில் சிஐடி

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் நெருங்கிய உதவியாளராக இருந்த கடற்படை அதிகாரி ஒருவரை, கைது செய்யும் முயற்சியில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இறங்கியுள்ளனர்.

கடல் கண்காணிப்புக்கான அணிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படை 25 ஆண்டுகளுக்கு முன்னதாக, கைவிடப்பட்ட கடல்சார் கண்காணிப்பு அணியை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

கைதான இந்தியர் ‘றோ’ உளவாளியே – விபரங்களை வெளியிட்டார் விமல் வீரவன்ச

சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர்  மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர், இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் ஒரு உறுப்பினர் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.