சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் கைது
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொகோற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, எதிர்வரும் செப்ரெம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கான தெளிவான காரணங்கள் ஏதும் வெளியாகவில்லை.
