நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கையளிக்கப்படும்
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கிழக்குப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறினார் என குற்றம்சாட்டி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
நேற்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டிருந்தது.
எனினும் சபாநாயகர் கொழும்புக்கு வெளியே சென்றிருந்ததால், அதனை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் இராணுவ புலனாய்வு பணியகத்தின் ஒரு பிரிவு ஈடுபட்டதாக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கூறிய நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது.