மேலும்

சஹ்ரான் பற்றிய தகவல்களை புறக்கணித்தவர் அருண ஜயசேகர

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண  ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து பெறப்பட்ட தகவல்களைப் புறக்கணித்தார் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அவர் முன்னர் கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்த போது, 2015ஆம் ஆண்டு தொடக்கம் அவர் சஹ்ரான் பற்றிய புலனாய்வுத் தகவல்களை பெற்று வந்தார் என்றும் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார்.

கொழும்பு நீதிவானிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்த பி அறிக்கை இந்த அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

பி அறிக்கை பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது, ஆனால் நாங்கள் அதைக் கண்டுபிடித்துள்ளோம்.

பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை 2018  ஒக்டோபர் 26ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கம் செய்தார்.

மட்டக்களப்பில் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, 2018 நவம்பர் மாதம் கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

வவுணதீவில் காவல்துறையினர் மீதான தாக்குதல் அதே மாதத்தில் நடந்தது.

வவுணதீவில் காவல்துறையினர் மீதான தாக்குதலுக்குப் பின்னால், உதவி ஆய்வாளர்  விஜேநாயக்கவின் மொழிபெயர்ப்பாளராக இருந்த அஜந்தன் இருப்பதாகக் காட்ட ஒரு நாடகம் உருவாக்கப்பட்டது.

இந்த மொழிபெயர்ப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே நேரத்தில், தங்கள் கடமையை புறக்கணித்த இராணுவத்தினர் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.இது கக்கில்லே மன்னரின் தீர்ப்பு.

அருண ஜயசேகர 1989 ஆம் ஆண்டு கிளர்ச்சி எதிர்ப்புப் பிரிவில் இணைக்கப்பட்டார்.

பின்னர் அவர் கிழக்கில் இராணுவ புலனாய்வுத் தலைவராகப் பணியாற்றினார்.

பின்னர் அவர் கிழக்கில் பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவர் 2019 இல், ஓய்வுபெற்று,  முன்னாள் இராணுவத்தினரின் சங்கத்தை உருவாக்கினார்.

அலட்சிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து புலனாய்வு அதிகாரிகளின் கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவு பரிந்துரைத்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் தடுக்கும் அந்த  பெரிய தலைவர் (Big boss) யார்?” என்றுk; அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *