மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வருகை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று கொழும்புக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று கொழும்புக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதி, மலையகத்தில் குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரம் வரையே அங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான சிறப்பு பாதுகாப்பில், 6000 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருப்புக்கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, புலனாய்வு அமைப்புகள் உச்ச விழிப்பு நிலையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கிய வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது. எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று நடக்கவுள்ள பேச்சுக்களின் போது திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக இந்திய – சிறிலங்கா அதிகாரிகளுக்கு இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுக்கள் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளன.