ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2015 அதிபர் தேர்தலுக்கு பின்னர், தன்னைப் புதைக்கத் திட்டமிட்டவர்களுடன் இணைந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கமாட்டார் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கூட்டு அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது, அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும்படி முன்மொழியப்பட்ட யோசனையை அவர்கள் இருவரும் நிராகரித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது.