‘மோசமான பேச்சுவார்த்தைக்கு நாம் செலுத்தும் விலை’- சஜித் விசனம்
அமெரிக்கா விதித்துள்ள 30 வீத வரி தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
“சிறிலங்கா ஏற்றுமதிகள் மீதான 30 சதவீத அமெரிக்க வரி என்பது மோசமான பேச்சுவார்த்தைக்கு நாம் செலுத்தும் விலையாகும்.
எங்களின் தன்முனைப்பு ஒவ்வொரு கூட்டாளியையும், ஒவ்வொரு நிபுணரது ஆதரவையும் தேடுவதைத் தடுத்தது.
இப்போது கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் ஏற்றுமதிகள் தொங்கு நிலையில் உள்ளன.
பாடநூல் வல்லுநர்கள் உண்மையான உலக பேச்சுவார்த்தைகளுக்கு பொருத்தமற்றவர்கள் என்பதற்கான நல்லதொரு உதாரணம் இது“ என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.