கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ரணில்
மகசின் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கோட்டை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து இன்று அதிகாலை மகசின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக குளுக்கோஸ் அளவு காணப்பட்டதால், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நலன் விசாரித்தனர்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரது உடல்நிலைக்கு சிறப்பு சிகிச்சை தேவை என்றும், சிறைச்சாலை மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இல்லை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
