மேலும்

சிங்கப்பூருக்குப் பயணமானார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

உலக நகரங்கள் மாநாடு, சிங்கப்பூர் அனைத்துலக நீர் வார மற்றும் தூய்மையான சுற்றாடல் மாநாடு ஆகியன சிங்கப்பூரில் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இந்த மாநாடுகளில் உரையாற்றுவதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர்லீ சென் லூங், பிரதி பிரதமரும், பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரட்ணம், முன்னாள் பிரதமர் கோ சோக் ரோங், மற்றும் சிங்கப்பூர் அரச உயர் பிரதிநிதிகளையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு  நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம்,  மலிக் சமரவிக்ரம,பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோரும், சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *