வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸ்? – சிறிலங்கா அதிபர் வெளியிட்ட தகவல்
வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிச்சயமாக மாற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு தீங்கிழைக்கும் நோக்கம் எதுவும் கிடையாது என்று சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்தார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எம்.சி.சி உடன்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.
குற்ற விசாரணைத் திணைக்களத்தில் திரிபுபடுத்திய சாட்சியம் அளித்தார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட தூதரக பணியாளரான கார்னியர் பனிஸ்டர் பிரான்சிசை, எதிர்வரும் 30ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிசை குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்தவுள்ளது.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, அவருக்கு எதிராக சிங்கள அமைப்பு ஒன்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்திலும், குற்ற விசாரணைத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளது.