மேலும்

‘கடத்தல் நடக்கவேயில்லை – நான் தான் பலிக்கடாவாகி விட்டேன்’

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்று அதிபர் செயலகத்தில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

‘இன்று காலை சுவிஸ் தூதருடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்தேன். இதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாட்சியங்கள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் உபேர் பதிவுகள் போன்ற தொழில்நுட்ப ஆதாரங்களைப் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுவிஸ் தூதரக பணியாளர் ஏன் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று தெரியவில்லை. அவர் புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்காததால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் நடத்தை குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு எந்த சந்தேகமும் சந்தேகமும் இல்லை.

அவர்கள் தங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப செயற்பட்டனர். அவர்களது பணியாளர்களில் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, அதைப் பற்றி அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்தனர். அது அவர்களின் பொறுப்பு.

ஒரு முழுமையான விசாரணை நடத்த பணியாளர் ஒத்துழைக்க வேண்டும் என்று சுவிஸ் தூதுவரிடம் கூறினேன்.

உண்மையில், நான்  தான் பலிக்கடாவாகி விட்டேன். நான் அதிபராக கடமைகளை ஏற்றுக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, ஒரு தூதரக பணியாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நியூயோர்க் ரைம்ஸ் மற்றும் பிற வலைத்தளங்கள் இந்தக் கதையைச் சுமந்தன

இது குறித்து முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். சஜித் பிரேமதாச கூட ஒரு அறிக்கை வெளியிடுவதைக் கண்டு மிகவும் வருத்தமாக இருந்தது.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *