நாடாளுமன்ற கலைப்பு அரசிதழ் – அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைப்பு
இன்று நள்ளிரவுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசிதழ் அறிவிப்பு அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இன்று நள்ளிரவுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசிதழ் அறிவிப்பு அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறவுள்ள சமாஜி ஜன பலவேகய கூட்டணியின் ஆரம்ப நிகழ்வை, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கவுள்ளார்.
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்ட நிலையில், இறுதியான முடிவு எடுக்கப்படாமல் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிவடைந்தது.
கொரோனா வைரஸ் எனப்படும், கொவிட் -19 தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறிலங்காவில் 16 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவின் பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கின்ற அதிகாரம், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இன்று கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலில், 271,789 புதிய வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே, பதவியில் இருப்பார் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமக்கு உறுதியளித்துள்ளார் என்று சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்த குழுவில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தமை குறித்து, கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.