மேலும்

யானைக்கே ஐதேக செயற்குழு ஆதரவு – சஜித் முரண்டு

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்ட நிலையில், இறுதியான முடிவு எடுக்கப்படாமல் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிவடைந்தது.

நேற்றிரவு நடந்த கூட்டத்தில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தரப்பு யானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற விடாப்பிடியான நிலைப்பாட்டில் இருந்தது.

அதேவேளை, கட்சியும் கூட்டணியும் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதானால், கட்சியின் பொதுச்செயலராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் விடாப்பிடியாக இருந்தார்.

அதேவேளை கட்சியின் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்ததாக, பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க தரப்பு யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது.

அதேவேளை, கபீர் காசிம் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்மொழிந்தார்.

அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் ஆராயப்பட்டது.

சஜித்- ரணில்  இடையில் நீடிக்கும் இழுபறிகளால்  நேற்றிரவு சின்னம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *