மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்தவின் தவறான கணிப்புகள் – ‘தி எக்கொனமிஸ்ட்’

சிறிலங்காவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் உச்சக்கட்டமாக நடைபேசியில் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று பரவவிடப்பட்டிருந்தது.

மூன்று அமைச்சர்கள் மட்டும் அவசரமாக பதவியேற்றனர்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் மட்டும் இன்று அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக அவசரமாகப் பதவியேற்றுள்ளனர்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற துரைரட்ணசிங்கம் மற்றும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோரே தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எஸ்.பி.திசநாயக்க – மகிந்த அணியை பலவீனப்படுத்த திட்டம்

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை நாளை மைத்திரியிடம் கையளிப்பு?

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் போர்க்குற்ற அறிக்கையின் பிரதி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தவார முற்பகுதியில் கையளிக்கப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடற்புலிகளின் படகுகள், ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி – டோறாவிலும் உலாவந்தார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை கடற்படைத் தளத்தில், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், மற்றும் ஆயுதங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு மூலம் துறைமுகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்காது

சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று பதவியேற்க வாய்ப்புகள் இல்லை என்று ஐதேக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் நாளை அறிவிப்பு – இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு சவாலாகி வரும் நீர்

சிறிலங்காவின் மூன்று பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் 2009இல் முடிவடைந்ததிலிருந்து, தமிழ் விவசாயிகள் தமது தொழிலை சிறப்புற முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

புதிய அமைச்சரவையில் 51 அமைச்சர்கள்?

புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.