மேலும்

கடற்புலிகளின் படகுகள், ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி – டோறாவிலும் உலாவந்தார்

maithri-trinco-naval (3)சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை கடற்படைத் தளத்தில், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், மற்றும் ஆயுதங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு மூலம் துறைமுகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.

சம்பூரில் காணிகளை மீள ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்க நேற்றுமுன்தினம் பிற்பகல் திருகோணமலை சென்றிருந்த சிறிலங்கா அதிபர் இரவுப் பொழுதை திருகோணமலையிலேயே கழித்திருந்தார்.

நேற்றுக்காலை அவர், திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தளத்துக்கு அவதானிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

maithri-trinco-naval (1)maithri-trinco-naval (2)maithri-trinco-naval (3)maithri-trinco-naval (4)maithri-trinco-naval (5)maithri-trinco-naval (6)

அதன் போது, கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள், ஆயுதங்களை அவர் பார்வையிட்டார்.

அத்துடன் சிறிலங்கா கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு (டோறா) மூலம் துறைமுகப்பகுதியையும் மைத்திரிபால சிறிசேன சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.