மேலும்

பிரிவு: செய்திகள்

தெற்காசியா வேகமான வளர்ச்சி; சிறிலங்கா வேகமான வீழ்ச்சி- எச்சரிக்கும் உலக வங்கி

தெற்காசியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு, 6.9 வீதமாக குறைவடையும் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.  

சீனாவுடன் முரண்பாடு ஏற்பட மகிந்தவே காரணம் – ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு

தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவைப் போல, விசாரணைக்குழுவொன்றை நியமித்து, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம் என்று தான் கூறிய ஆலோசனையை மகிந்த ராஜபக்ச நடைமுறைப்படுத்தியிருந்தால், ஐ.நா தீர்மானங்களை தவிர்த்திருக்கலாம் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நிதிஅமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- மகிந்த வீட்டில் தீர்மானம்

சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையை, நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜேவிபியில் இருந்து விலகினார் சோமவன்ச – மீண்டும் பிளவுபடுகிறது கட்சி

ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து ஜேவிபி மீண்டும் பிளவுபடும் நிலை தோன்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நௌருவில் உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியேற்றுகிறது அவுஸ்ரேலியா

நௌரு தீவில் உள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் கம்போடியாவில் குடியேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடலில், தமது போர்க்கப்பல்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத் தேவைகளுக்காக பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது.

சிறிலங்காவின் நல்லிணக்கம், புனர்வாழ்வு குறித்து பேசினேன் – அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும், புனர்வாழ்வு  நடவடிக்கைகள் குறித்தும், தாம், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.

ஆதரவாளர்களுடன் மகிந்த முக்கிய சந்திப்பு – 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

தன்னைப் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு வலியுறுத்தி வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

தமிழருக்கு எதிரான ஆயுதமாக பாலியல் வன்முறைகள் – பாதுகாப்புச் சபையில் பான் கீ மூன் அறிக்கை

சிறிலங்காவில் போருக்குப் பின்னரும், பாலியல் ரீதியான வன்முறைகள் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.