மேலும்

ஜெனிவா தீர்மானத்தில் நீதித்துறை பற்றிய கரிசனைகளே அதிகம் – சிறிலங்கா பிரதமர்

ranilஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக தீர்மானத்தை  முன்வைப்பது தொடர்பான பேச்சுக்களில், நீதித்துறை பற்றிய கரிசனைகளே அதிகமாக இருந்ததாகவும், சிறிலங்கா படையினர் தொடர்பான கரிசனைகள் அதிகம் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

கொழும்பில் இன்று நடந்த தேசிய முகாமைத்துவ கருத்தரங்கில் உரையாற்றிய அவர்,

நீதித்துறையை வலுப்படுத்துவது பற்றிய கேள்விகளே எழுப்பப்பட்டன.

முன்னைய அரசாங்கத்தினால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னரே, சிறிலங்காவின் நீதித்துறை பற்றிய கவலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

போருடன் தொடர்புடைய சம்பவங்களுக்குப் பதிலளிக்கும் உள்நாட்டு செயல்முறை நீதிமன்றத்தைப் பிரதானமாக கொண்டிராது, அனால் தேசிய ஒற்றுமை நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும்.

உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை நாம் கவனிக்க வேண்டும்.இழப்பீடுகள் மற்றும்  ஏனையவற்றை அவர்களுக்கு எம்மால் வழங்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *