மேலும்

ஐ.நா அமைதிப்படையில் கூடுதல் சிறிலங்கா படைகளை இணைக்குமாறு மைத்திரி கோரிக்கை

un-peacekeeping-ms (1)சிறிலங்கா படையினரை, ஐ.நா அமைதிப்படையில் மேலதிகமாக இணைத்துக் கொள்வதற்கு, சிறிலங்காவும் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் ஒரு பக்க நிகழ்வாக, அமைதிகாப்பு தொடர்பான உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு நேற்று நியூயோர்க்கில் நடைபெற்றது.

இதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த மாநாட்டிலேயே, சிறிலங்கா உள்ளிட்ட 50இற்கும் அதிகமான நாடுகள், தமது நாடுகளின் படைகளை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

அமைதிகாப்பு பணிகளில் 30 ஆயிரம் படையினரை புதிதாக உள்வாங்க வேண்டும் என்றும் இதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

un-peacekeeping-ms (1)un-peacekeeping-ms (2)un-peacekeeping-ms (3)

சீனா 8000 காவல்துறையினரையும், கம்போடியா 5000 படையினரையும், அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரியுள்ளன.

இந்தோனேசியா, பிரித்தானியா, ஆர்மேனியா, பின்லாந்து, கானா, மெக்சிகோ, சிறிலங்கா, தென்கொரியா, வியட்னாம், உகண்டா, ருவாண்டா, உள்ளிட்ட நாடுகளும் தமது படைகளை அதிகளவில் ஐ.நா அமைதிப்படையில் உள்வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

அதேவேளை, இந்த மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஒவ்வொரு பிரச்சினைக்கும் அமைதி காப்பு நடவடிக்கை தீர்வாக அமையாது என்று எமக்குத் தெரியும்.

ஆனால், ஆயுத மோதல்களைத் தீர்க்க அவர்களே இன்னமும் முக்கியமான ஒரு கருவியாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *