மேலும்

நல்லாட்சி, ஜனநாயகத்தை வலுப்படுத்தியதற்கு மைத்திரியைப் பாராட்டினார் ஒபாமா

சிறிலங்காவில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அதற்கான அவரது அர்ப்பணிப்பையும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டியுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன் போது,  புதிய அரசாங்கத்தின் கீழ் சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தாம் மதிப்பதாகவும். அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர், போருக்குப் பின்னர், நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வறுமை ஒழிப்புக்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு, அதிபர் ஒபாமா, தமது அரசாங்கம் சிறிலங்காவுக்கு முழுமையான உதவிகளை வழங்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *