மேலும்

பிரிவு: செய்திகள்

போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் படையினரின் கௌரவத்தை பாதுகாப்போம் – மைத்திரி உறுதி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கும், முப்படையினரின் கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாக்கும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு இருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசு அனுமதிக்க மறுத்த அமெரிக்க அதிகாரி இன்று சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல், சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்

வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க முடிவு – பொதுமன்னிப்பு இல்லை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் – பதில் கூறாமல் நழுவினார் ஐ.நா பொதுச்செயலர்

தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என நினைக்கிறீர்களா என்று இந்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவியுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க இந்தியா முயற்சி – உறுதிப்படுத்துகிறது இந்திய ஊடகம்

சிறிலங்கா விமானப்படைக்கு, போர் விமானங்களை வழங்குவதற்கு இந்தியாவும், சீனாவும் முன்வந்திருக்கின்றன என்பதை சுயாதீனமான வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனந்தசங்கரியுடன் கைகோர்க்கிறார் கருணா – தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறார்

வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை காப்பாற்ற முனையும் அமெரிக்க அதிகாரிகள் – அம்பலப்படுத்துகிறார் பிரட் அடம்ஸ்

சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிகாரிகள் பலர் எதிர்த்திருந்தனர்.  ஆனால் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரான ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானத்தை உந்தித் தள்ளினார்.

உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் குடியுரிமை பறிப்பு – பரணகம ஆணைக்குழு பரிந்துரை

முன்மொழியப்பட்ட உள்நாட்டு பொறுப்புக்கூறும் செயல்முறைகள் மற்றும் போருக்குப் பிந்தைய நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களின் குடியுரிமையைப் பறிக்க, காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

தன்னையும் இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களில் சிக்கவைக்க முயற்சி என்கிறார் மகிந்த

தன்னைப் போர்க்குற்ற வழக்கில் சிக்க வைக்கவும், தன்னையும், சிறிலங்கா இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.