சிறைகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத அரசியல் கைதிகள் யாருமில்லையாம்
குற்றச்சாட்டுகளின்றி எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளின்றி எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது.
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து சிறிலங்கா அதிபரைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த உதவிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும், நேரடியாக உதவி செய்ய முடியாது என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று ஆரம்பமாகியுள்ள இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.
சென்னை, சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்.
சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவராகப் பணியாற்றும் கத்தரின் ருசெல் அம்மையார் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை என்று, காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
மூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்பானவர்களை விசாரணை செய்து தண்டிப்பதற்கான முறைசார் பொறிமுறை ஒன்று மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என்பதை, இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஆணைக்குழுக்களும் கோடிட்டுக் காட்டியுள்ளன.
சிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கு இடையிலான பாரிய கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.