மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் மங்கள சமரவீர

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க்கில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா அறிக்கையை தாமதப்படுத்த அமெரிக்கா இணக்கம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது தாமதிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் விவகாரம் குறித்து மங்களவுடன் பேசினார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், மனித உரிமைகள், நல்லிணக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தாம் பேச்சுக்களை நடத்தியதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.

ஜோன் கெரியை சந்தித்தார் மங்கள

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஒபாமா, பான் கீ மூன், ஜோன் கெரியை சிறிலங்கா வருமாறு அழைப்பு

அமெரிக்க அதிபர் சிறிலங்காவுக்கு வருகை தருவதை தாம் எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கை தாமதமாகுமா? – கருத்துக் கூற மறுத்த ஐ.நா பேச்சாளர்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடுவது தாமதிக்கப்படுமா என்பது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

ஐ.நா அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா கோரிக்கை – வொசிங்டனில் மங்கள தகவல்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

அகதிகளை இப்போது அனுப்ப வேண்டாம் – மோடியிடம் கோருவாராம் மைத்திரி

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய  சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் 58.3 மில்லியன் டொலரைப் பதுக்கியுள்ள இலங்கையர்கள்

சுவிற்சர்லாந்து வங்கிகளில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.