மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அமைதியான, நம்பகமான தேர்தலை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறார் பான் கீ மூன்

வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தல், அமைதியான முறையிலும், நம்பகமான வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

மகிந்தவுக்கு ஆதரவு திரட்டும் மோடியின் ஆலோசகருக்கு 100 மில்லியன் ரூபா கட்டணம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திப் பரப்புரை மேற்கொள்வதற்காக, வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் அரவிந்த் குப்தாவுக்கு 100 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்வான் கண்காணிப்பாளர்களுக்கு சிறிலங்கா தடை

சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில், தாய்வான் நாட்டவர்களை ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடை விதித்துள்ளது.

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு மோடியின் தகவல் தொழில்நுட்ப நிபுணர் உதவி?

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் உதவி வருவதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தேர்தல் களநிலவரங்களை ஆய்வு செய்யும் அமெரிக்கா

வரும் ஜனவரி 8ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வடக்கிலும், கிழக்கிலும் உள்ள களநிலவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் குறித்துப் பேசும் உரிமை மகிந்தவுக்கு கிடையாது – சம்பிக்க ரணவக்க

போர்க்குற்றங்கள் குறித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

புதிய போர்க்குற்ற விசாரணை – வாக்குறுதி அளிக்கிறார் மகிந்த

எதிரணியின் கடுமையான போட்டிக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அடுத்த பதவிக்காலத்தில் புதிய போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார்.

நாடு திரும்புகிறார் சம்பந்தன் – 27 நாள் வெளியாகிறது கூட்டமைப்பின் நிலைப்பாடு

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வரும் 27ம் நாள் வெளியிடப்படும் என்று, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், சிறிலங்காவுக்கு ஆபத்து – ஜி.எல்.பீரிஸ்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், சிறிலங்காவுக்கு ஆபத்து உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிரணியின் கிண்டலால் அவசரமாக வெளியாகிறது மகிந்தவின் தேர்தல் அறிக்கை

‘மகிந்த சிந்தனை- முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை இன்று அவசர அவசரமாக வெளியிடப்படவுள்ளது.