மாற்றுத் தலைமையை உருவாக்கும் கூட்டம் அல்ல – கருணாநிதி பாணியில் விக்கி அறிக்கை
யாழ்ப்பாணத்தில், நடத்தப்பட்ட இரகசியக் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற் கட்சியோ, மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமோ அல்ல என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி பாணியிலான கேள்வி – பதில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.






