மேலும்

யாழ்ப்பாணத்தில் ‘இந்தியா கோணர்’ திறந்து வைப்பு

india-corner-jaffna (2)யாழ். பொது நூலகத்தில் “இந்தியா கோணர்” நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார ஆகியோர் திறந்து வைத்தனர்.

யாழ். மாநகரசபையுடன் இணைந்து, இந்திய அரசாங்கம் இந்தியா கோணரை உருவாக்கியுள்ளது. இங்கு பல்வேறு வகையான நூல்கள், இறுவட்டுகளைப் பொதுமக்கள் பெற்றுப் பயன்பெற முடியும்.

இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட நூல்கள், குறிப்பாக, தமிழ் மொழி நூல்கள், இந்திய வரலாற்று நூல்கள்,, கலாசார பாரம்பரிய நூல்கள், சிறுவர் நூல்கள், இந்தியத் தலைவர்கள் மற்றும் தமிழ், கலை, கலாசார நூல்கள் இங்கு கிடைக்கும்.

india-corner-jaffna (2)india-corner-jaffna (1)india-corner-jaffna (3)

இது  இந்திய மக்கள் மற்றும் கலாசாரத்தை யாழ்ப்பாண மக்கள் அறிந்து கொள்வதற்கான சாளரமாக இருக்கும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *