தைப்பொங்கலுடன் முடிவுக்கு வந்த பனிப்போர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது.
சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும் வடக்கு மாகாணத்திலும் தமிழர்கள் வாழ்விலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை என்று பட்டியல் போட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் மூத்த இதழாசிரியரான- கே.கே.ஆர் என அழைக்கப்படும், கந்தர் இரத்தினசிங்கம் (வயது 87) இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் வீடு ஒன்று, இரகசிய வதைமுகாமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
வலி.வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள போதிலும், இந்தப் பேரவையில் இணைந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வுத் திட்ட ஆவணத்தை தயாரிக்க 15 பேர் கொண்ட உபகுழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் செய்தியாளர் மாநாட்டில், பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்திடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவரைப் பதிலளிக்க விடாமல், செய்தியாளர்கள் மீது சினத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
தமிழ் மக்கள் பேரவை எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே கடமையாற்றும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.