மேலும்

வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரண உதவியைப் பெறுவது குறித்து இந்தியா பரிசீலனை

தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்கு மாகாணசபையினால், திரட்டப்படும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத் துயருக்கான உதவிகளை இந்திய அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரவில்லை என்றும், இதனால் இந்த உதவிகளைத் தமது பணியகத்தினால் பெற முடியாதிருப்பதாகவும், இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனைச் சந்தித்து, இதனை ஒரு சிறப்பு சூழ்நிலையாக கருதி, வடக்கு மாகாணசபையின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு இந்திய அதிகாரிகள் தமது நிலைப்பாட்டில் தளர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

வடக்கு மாகாண அவைத்தலைவரின் இந்தக் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக, இந்தியத் துணைத் தூதுவர் உறுதி அளித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நம்பகமான அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக உதவிகளை அனுப்புவ குறித்து கவனம் செலுத்துமாறும், இந்தியத் துணைத் தூதுவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *