மேலும்

காணாமற்போனோருக்கு மரணச்சான்றிதழ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆணைக்குழு

missing-commision-jaffna (1)யாழ். மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு நடத்தி வரும், அமர்வில் சாட்சியமளிக்கும், உறவுகளிடம், மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளுமாறு ஆணைக்குழு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு நேற்றுத் தொடக்கம் யாழ். மாவட்டத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்து வருகிறது.

நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் சுமார் 160 பேரிடம் ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்தது.

இதன்போது, சாட்சியமளிக்க வந்த காணாமற்போனோரின் உறவினர்களிடம் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, மற்றும் அதிகாரிகள், காணாமல்போனோருக்கான மரணச் சான்றிதழையும் இழப்பீட்டுத் தொகையையும் அழுத்தம் கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

missing-commision-jaffna (1)missing-commision-jaffna (2)missing-commision-jaffna (3)

எவ்வளவு காலத்துக்கு அங்குமிங்கும் அலையப் போகிறீர்கள். உங்களுடைய உறவுகளுக்காக வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகையையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆணைக்குழு அதிகாரிகளின் இந்த அறிவுரை காணாமற்போனோரின் உறவுகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணாமற்போனோரைக் கண்டுபிடித்து தருமாறு தாம் சாட்சியமளிக்க வந்த போது, மரணச்சான்றிதழ் பெறுமாறு ஆணைக்குழுவினர் கூறியது அதிர்ச்சியளித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஆணைக்குழுமுன் சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலானோர், தமக்கு இழப்பீடோ, ஏனைய வசதிகளோ தேவையில்லை என்றும் தமது பிள்ளைகள் மற்றும் உறவுகளை திரும்பத் தந்தால் போதும் என்று கண்ணீர் விட்டுக் கதறியழுதனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *