மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அமெரிக்க நாடாளுமன்றக் குழு சிறிலங்கா அதிபரைச் சந்திப்பு

அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்று சிறிலங்காவுக்குப் பணயம் மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒது அங்கமாக இந்தக் குழுவினர் மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆயுதம் தாங்கிய காவல்துறைக் குழுக்கள் பணியில்

சமூக விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆயுதம் தாங்கிய நடமாடும் காவல்துறைக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஐவரும் இடைநிறுத்தம்

தி நேசன் இதழின் இணை ஆசிரியராக இருந்த கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில் சிறிலங்கா இராணுவ மேஜரும் இரு படையினரும் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஒருவரும், இரண்டு படையினரும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

சிறிலங்காவில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

காதலர்தினத்துக்கு சிறிலங்கா அரசியல்வாதி இறக்குமதி செய்த 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு

சிறிலங்கா அரசியல்வாதி ஒருவரால் காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2000 ஏனைய மலர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

சிங்களவர்கள் ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம்- சுமந்திரன்

தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுத்தால், சிங்களவர்களை, ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று அவுஸ்ரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

தப்பியோடிய 563 சிறிலங்கா படையினர் ஒரே நாளில் கைது

சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய 563 படையினர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.