மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அதிபர் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிப்பு

பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், அதிபர் ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் நாள் வெளியிட்டுள்ளார்.

மைத்திரி வெளியேறிய போதே சுதந்திரக் கட்சி உடைந்து விட்டது – மகிந்த

சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2014ஆம் ஆண்டு நொவம்பர் 21ஆம் நாளே பிளவுபட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

அபேராம விகாரையில் அரசியல் கூட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை

நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில், அரசியல் கூட்டங்களையோ, அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடைவிதித்துள்ளது.

பிரகீத் கடத்தலுக்கு உத்தரவிட்ட முன்னைய அரசின் மூத்த அதிகாரி – புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவத்துடன், முன்னைய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தன் குடும்பத்தினரைத் தண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார் மகிந்த

தன்னை பழிவாங்குவதற்காக, தனது குடும்பத்தை தண்டிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

வெலிக்கடைச் சிறையில் யோசிதவைச் சந்தித்தார் மகிந்த

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தனது மகன் யோசித ராஜபக்சவின், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.

சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை – விஜேதாச ராஜபக்ச

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா- இல்லையா என்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்று நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணையே நடக்கும், அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா அரசு

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இருக்காது என்றும், உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன.

சிறிலங்காவுக்கான நிதியுதவியை அதிகரிக்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கி

அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சிறிலங்காவுக்கு வழங்கும் நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு, ஒரு பில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.