மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப்  படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது சிறிலங்கா

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

யாழ். வன்முறைக் குழுக்களை வேருடன் அகற்ற சிறப்பு அதிரடிப்படை களமிறக்கம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிகரித்துள்ள வாள்வெட்டு போன்ற சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், சிறப்பு அதிரடிப்படையினரை ஈடுபடுத்த, சிறிலங்கா காவல்துறை முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாஜுதீன் கொலை – சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் மரணத்துக்கு நாள் குறித்த சோதிடர் விஜித றோகண கைது

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மரணிக்கப் போவதாக, சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றின் மூலம் ஆரூடத்தை வெளியிட்ட சோதிடர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய்பபட்டார்.

ஐதேகவுடனோ, ரணிலுடனோ ஒருபோதும் இணையமாட்டேன் – கருணா

தாம் எந்தச் சூழ்நிலையிலும் ஐதேகவுடனோ, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து செயற்படமாட்டேன் என்று எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

புலிகள் மீண்டும் ஒருங்கிணையும் அறிகுறியாம்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டதானது, சிறிலங்காவில் மீண்டும் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் தேசப்பற்று மிக் விசாரணையில் அம்பலமாகும் – ராஜித சேனாரத்ன

சர்ச்சைக்குரிய மிக் போர் விமானக். கொள்வனவு பற்றிய விசாரணைகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எத்தகையவர் என்பதை அம்பலப்படுத்தும் என்று சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிக்கத் திட்டம்

அடுத்த நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதே தனது திட்டம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த எச்சரிக்கை

போர் வெற்றியைக் காட்டிக் கொடுக்கும் புதிய அரசியலமைப்புக்கான பணிகளை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவில் துறைமுகங்கள், நிலங்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.